• கதைகள்
  • புகைப்படங்கள்

குட்டம் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் உள்ள அதிசய தூங்காப் புளியமரம்.

S. Robinson 2:06 PM கதைகள் கருத்துகள் இல்லை



குட்டம் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் உள்ள அதிசய தூங்காப் புளியமரம்.

     ஆன்மிகத்திற்கும், புளியமரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல கோவில்களில் புளியமரம் தலவிருட்சமாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுயம்புலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ள உவரிக்கு அருகே உள்ள குட்டம் என்ற கடற்கரையோர கிராமத்தில் ஸ்ரீஆனந்தவல்லி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. 

   இந்தக் கோவிலின் முன்பு பிரம்மாண்டமான புளியமரம் ஒன்று காணப்படுகிறது. இந்த மரத்தின் வயது 300-க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். இதை "தூங்காப் புளியமரம்" என்று அழைக்கிறார்கள். அதாவது, சாதாரண புளிய மரங்களைப் போல் இந்த அதிசய புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் தூங்காது. அதாவது, மடிந்துபோய் இருக்காது. எப்போதும் ஃப்ரெஸ் ஆகவே இருக்கும். மேலும், இந்த புளியமரத்திற்கு பல்வேறு நோய்களை தீர்க்கும் அபார சக்தியும் உள்ளது. இந்த புளியமரத்தின் இலையை அரைத்துக் குடித்தால் எப்பேற்பட்ட நோயும் குணமாகிவிடும் என்று இங்குள்ளவர்கள் நம்புகிறார்கள். 

     குட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கிறார்கள். அவர்கள், தங்கள் ஊருக்கு வரும் போது, இந்த தூங்காப் புளியமரத்தின் இலைகளை தவறாமல் பறித்து கொண்டுச் செல்கிறார்கள். இந்த இலைகள் தங்களுடன் இருக்கும் பட்சத்தில், தங்களுக்கு எல்லாமே வெற்றியாக அமையும் என்ற அவர்களது நம்பிக்கையும் இதற்கு காரணம்.
  • Share on Google +
  • Share on facebook
  • Share on twitter
  • Share on Linkedin
புதிய இடுகை பழைய இடுகைகள்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )

பிரபலமான இடுகைகள்

  • குட்டம் மார்த்தாண்டன் வரலாறு ஒரு சிறு பார்வை.
      பத்மநாபபுரம் அரண்மனை   குட்டம் ஆனந்தவல்லி அம்மன் கோவில் தி ருச்செந்தூரில் இருந்து - கன்னியாகுமரி செல்லும் கடற்கரை சா...
  • குட்டம் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் உள்ள அதிசய தூங்காப் புளியமரம்.
    குட்டம் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் உள்ள அதிசய தூங்காப் புளியமரம்.      ஆன்மிகத்திற்கும், புளியமரத்திற்கும் நெருங்கிய ...
  • குட்டம் ஊரில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
  • ஆனந்தம் அருளும் குட்டம் ஆனந்தவல்லி அம்மன்
    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு குட்டம் கிராமத்தில் குளக்கரையில் கேரளாவில் இருந்து வந்த சில குடும்பத்தினர் குடியேறினர். அன்றைய கே...
  • குட்டம் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவிலின் புகைப்படங்கள்
  • 2021 குட்டம் புகைப்படங்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பங்களிப்பாளர்கள்

  • S. Robinson
  • Unknown

© குட்டம் ஶ்ரீ ஆனந்தவல்லி அம்மன் | KUTTAM SRI ANANDHAVALLI AMMAN 2015. Posts RSS . Comments RSS